மட்டக்களப்பில் 14 வயதுடைய அல்போன்ஸ் ஜெசிக்கா என்ற மாணவி காணவில்லை

#SriLanka #Police #people #Lanka4 #Girl #Missing #L4
Prasu
1 hour ago
மட்டக்களப்பில் 14 வயதுடைய அல்போன்ஸ் ஜெசிக்கா என்ற மாணவி காணவில்லை

மட்டக்களப்பில் 14 வயதுடைய அல்போன்ஸ் ஜெசிக்கா என்ற மாணவி கடந்த 02ம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

நடந்தது என்ன?

சம்பவத்தன்று வழமைபோல பாடசாலை சென்று வீடு திரும்பிய சிறுமி, பிற்பகல் 2:00 மணியளவில் தனியார் வகுப்புக்கு செல்வதாகக் கூறிச் சென்றவர், மாலை வரை வீடு திரும்பவில்லை.

இது தொடர்பாக பொலிஸ் அவசரப் பிரிவு (119) மற்றும் ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்:

இந்தச் சிறுமி தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தாலோ அல்லது அடையாளம் காணப்பட்டாலோ, உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பெற்றோருக்கோ அறியத் தருமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தயவுசெய்து இந்தத் தகவலை உங்களது வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் முகநூல் பக்கங்களில் முடிந்தவரை பகிர்ந்து (Share செய்து) சிறுமி பாதுகாப்பாக வீடு திரும்ப உதவுங்கள்!

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4