போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை?

#SriLanka #Death #drugs #Lanka4 #President #AnuraKumaraDissanayake #penalty #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை?

நாட்டின் பொருளாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் சமூகக் கட்டமைப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் “நாடே ஒன்றுபட்டு” (Ratama Ekata) தேசிய செயற்பாட்டுச் சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல் குறித்து பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன.

குறிப்பாக, போதைப்பொருள் தொடர்பான சட்டத் திருத்தங்களை விரைவாக வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல், அரச பகுப்பாய்வாளர் (Government Analyst) அறிக்கைகளைப் பெறும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துதல் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், சிறைச்சாலைகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துதல் மற்றும் பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் அபாயத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் ‘மிதுரு பாசல’ திட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4