ஒரே இரவில் இருமடங்காக பரவிய காட்டுத்தீ – கனடாவில் அவசரநிலை
மேற்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பரவி வரும் காட்டுத்தீ, ஒரே இரவில் இருமடங்கிற்கும் அதிகமான பரப்பளவுக்கு வேகமாக விரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ தற்போது சுமார் 23,500 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலத்த காற்று மற்றும் வறட்சியான காலநிலை காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு படையினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காட்டுத்தீயின் வேகமான பரவலைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
தீ மேலும் பரவும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை சுமார் 20,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், காட்டுத்தீயின் பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே