உத்தரபிரதேசத்தில் மகள் மற்றும் மகளின் காதலரின் உதவியுடன் கணவரை கொன்ற பெண்

#India #Arrest #Murder #Women #Body #Lanka4 #family #L4
Prasu
1 hour ago
உத்தரபிரதேசத்தில் மகள் மற்றும் மகளின் காதலரின் உதவியுடன் கணவரை கொன்ற பெண்
உத்தரபிரதேசத்தில் மகள் மற்றும் மகளின் காதலரின் உதவியுடன் கணவரை கொன்ற பெண் உத்தரபிரதேசத்தில் ஒரு பெண், தன் கணவருக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரது தலையை கல்லால் அடித்து, தன் மகள் மற்றும் மகளின் காதலரின் உதவியுடன் கொலை செய்ததாகக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள், யமுனா நதிக்கரையில் உள்ள ஒரு வனப்பகுதியில் உடலை வீசியதாகவும், கடந்த மூன்று நாட்களாக இடைவிடாத தேடுதல் வேட்டை நடத்தியும், காவல்துறையினரால் இன்னும் உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குற்றம் சாட்டப்பட்ட மூவரிடமும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், உடலைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

இந்நிலையில், ஜெய்சிங்புராவில் உள்ள ராத்-கிருஷ்ண வாடிகாவைச் சேர்ந்த கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் ராம்பாபு என்பவரிடமிருந்து முறைப்படியான புகார் பெறப்பட்டதை தொடர்ந்து இந்த கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

புகாரில், அவரது தம்பி 42 வயது மனோஜ் சோனி, அவரது மனைவி 40 வயது நைனா , அவர்களது இளைய மகள் பக்தி மற்றும் பக்தியின் காதலராகக் கூறப்படும் 22 வயது விமல் சௌத்ரி ஆகியோரால் கொலை செய்யப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். 

யமுனா நதிக்கரையில் உள்ள அக்ரூர் கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் உடலை எரித்து, பின்னர் அங்கேயே புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்புக்கொண்டதாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4