பயன்படுத்தப்பட்ட பாடசாலை நீச்சல் ஆடைகளுக்கு தடை: ஜப்பனீஸ் இணைய நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

#ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
பயன்படுத்தப்பட்ட பாடசாலை நீச்சல் ஆடைகளுக்கு தடை: ஜப்பனீஸ் இணைய நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

ஜப்பானின் பிரபலமான இணையவழி வணிக நிறுவனமொன்று மாணவர்கள் பயன்படுத்திய பாடசாலை நீச்சல் ஆடைகளை தங்களது தளத்தின் வழியாக விற்பனை செய்வதற்குத் தடை விதிப்பதாக , பயனர்களுக்கு அறிவித்துள்ளது. 

ஜப்பான் பாடசாலைகளில் உடற்கல்வி பாடத்தின் பகுதியாக மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக அவர்கள் அணியும் நீச்சல் ஆடை ஜப்பானிய மொழியில் 'ஸ்கூல் மிசுகி' என்று அழைக்கப்படுகிறது. மாணவர்கள் விரைவாக வளர்ந்து விடுவதாலும், இவை சில முறை மட்டுமே பயன்படுத்தப்படுவதாலும், செலவைக் குறைப்பதற்காகப் பல குடும்பங்கள் பயன்படுத்திய நீச்சல் ஆடைகளை இணையவழி மூலமாக வாங்கவோ விற்கவோ முயல்கின்றன.

ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த ஆடைகள் சிலருக்கு தவறான ஈர்ப்பாக அமைவதால், இத்தகைய பரிவர்த்தனைகள் தவறான செயல்களுக்கு வழிவகுக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு குறித்த இணையவழி நிறுவனம் இந்த தடையை விதித்துள்ளது.

பயன்படுத்திய பாடசாலை நீச்சல் ஆடைகளை விற்கும் நடைமுறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், தடையை மீறி இவற்றை விற்பனை செய்ய முயலும் பயனர்களின் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என்றும் குறித்த நிறுவனம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!