நாடு முழுவதும் 431 தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் பறிமுதல்

#SriLanka #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
17 hours ago
நாடு முழுவதும் 431 தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் பறிமுதல்

இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளின் போது, 431 தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தரமற்ற தலைக்கவசங்களைப் பயன்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும், 3,500 தரமற்ற தலைக்கவசங்களை உற்பத்தி செய்ததாகக் கூறப்படும் இரண்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் வருடாந்தம் வீதி போக்குவரத்து விபத்துக்களில் 2,500 முதல் 2,700 பேர் வரை உயிரிழப்பதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

அவர்களில் சுமார் 1,000 மரணங்கள் மோட்டார் சைக்கிள் விபத்துக்களால் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4