நீதிமன்ற உத்தரவின் பேரில் ஷானி அபேசேகருக்கு DIG பதவி உயர்வு

#SriLanka #CourtOrder #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
நீதிமன்ற உத்தரவின் பேரில் ஷானி அபேசேகருக்கு DIG பதவி உயர்வு

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஷானி அபேசேகர, அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார். 

அவருக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, புதிய பொறுப்பை ஏற்கும் வகையில் இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிர்வாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஷானி அபேசேகருக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

இந்தப் பதவி உயர்வு 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய பதவியைப் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!