மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு...

#SriLanka #Batticaloa #Prison #LANKA4 #Security #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு...

நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இன்று (07) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றி பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

அத்துடன், இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவினரும் சிறைச்சாலையைச் சுற்றிய பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தின சிறைச்சாலைக்கு நேரில் விஜயம் செய்து, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் தற்போது 42 பேர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலையில் மொத்தமாக 980 கைதிகள் உள்ளதாகவும் சிறைச்சாலை அத்தியட்சகர் மோகன் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் உள்ள கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!