கனடாவில் இந்தியர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை
மதுபோதையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்று இரு மிதிவண்டிப் பயணிகளைக் கொன்ற குற்றத்திற்காக 47 வயதான குல்தீப் சிங் கில் என்பவருக்குக் கனடா நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 13 அன்று வினிபெக்கில் இடம்பெற்ற சம்பவத்தில் 31 வயதான எகோர் போபோவ் மற்றும் அவரது துணைவியாரான 25 வயதான கெர்ரி பொன்னர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மோதிய உடனடியாக வாகனத்தைக் கைவிட்டு அவர் தப்பி ஓடியபோதிலும், விரைவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரது ரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் மதுவின் அளவு இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
குல்தீப் சிங் கில் ஏற்கனவே 2016 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது, உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது மற்றும் விபத்து ஏற்படுத்திவிட்டுத் தப்பியதற்காக அபராதமும் தடையும் விதிக்கப்பட்டவர் என்பது நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.
இந்தியாவைச் சேர்ந்த நிரந்தரக் குடியுரிமை பெற்ற குல்தீப் சிங் கில், இந்தத் தண்டனைக்குப் பிறகு கனடாவில் இருந்து நாடுகடத்தப்படலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே