2.5 மில்லியன் டொலர் இழப்பு: சைபர் பாதுகாப்பு தோல்வியே காரணம் என சஜித் குற்றச்சாட்டு

#SriLanka #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #cyber crime
Abi
1 month ago
2.5 மில்லியன் டொலர் இழப்பு: சைபர் பாதுகாப்பு தோல்வியே காரணம் என சஜித் குற்றச்சாட்டு

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணையை இலங்கை இழந்தமைக்கு அரசாங்கத்தின் நிர்வாகப் பலவீனங்களும் சைபர் பாதுகாப்பு குறைபாடுகளுமே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார்.

பலவீனமான கடவுச்சொல் பயன்பாடு, பொறுப்புகள் தெளிவாக ஒதுக்கப்படாமை மற்றும் போலி மின்னஞ்சல்களை அடையாளம் காணத் தவறியமை போன்றவை இந்த இழப்புக்கு வழிவகுத்ததாக அவர் தெரிவித்தார். 

மேலும், இந்த விவகாரத்தில் திறைசேரியும் மத்திய வங்கியும் ஒரே நிலைப்பாட்டில் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளை மீறியும் மக்கள்மீது அதிக வரிச்சுமையை ஏற்படுத்துவதாகவும் அவர் விமர்சித்தார். 

சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டங்கள் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்படுவதாகவும், மக்களின் வாழ்க்கைச் செலவு தொடர்பான புள்ளிவிவரங்கள் உண்மைக்குப் புறம்பாக வெளியிடப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!