கஞ்சிபானி இம்ரானை கைது செய்ய மலேசியாவில் விசேட நடவடிக்கை!

#SriLanka #ARREST #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 month ago
கஞ்சிபானி இம்ரானை கைது செய்ய மலேசியாவில் விசேட நடவடிக்கை!

சர்வதேச குற்றக்கும்பல் தலைவராக அடையாளம் காணப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரானை கைது செய்வதற்காக மலேசிய காவல்துறை, இன்டர்போல் மற்றும் இலங்கை விசேட குழுவினர் இணைந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹான் ஒலுகல தலைமையிலான குழுவினரும் இந்த நடவடிக்கையில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

கஞ்சிபானி இம்ரான் மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மலேசியாவில் அவருடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் வலையமைப்புகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவருடன் தொடர்புடைய குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கான விசாரணைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!