மொரிஷியஸுக்கு இலங்கையில் தயாரிக்கப்பட்ட நவீன மீன்பிடிப் படகு கையளிப்பு

#SriLanka #LANKA4 #Ship #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #fishing boats
Abi
1 month ago
மொரிஷியஸுக்கு இலங்கையில் தயாரிக்கப்பட்ட நவீன மீன்பிடிப் படகு கையளிப்பு

கொழும்பு மட்டக்குளி சீநோர் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட “CAPTAIN C” எனும் 55 அடி நீளமான நவீன மீன்பிடிப் படகு, மொரிஷியஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

234,000 அமெரிக்க டொலர் பெறுமதியான இந்தப் படகு, இலங்கையின் கப்பல் கட்டுமான திறனையும், அரசுக்குச் சொந்தமான சீநோர் நிறுவனத்தின் சர்வதேச வளர்ச்சியையும் வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்டத்தில் இயங்கிய சீநோர் நிறுவனம் தற்போது சிறந்த முகாமைத்துவம், ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அரசின் ஆதரவின் மூலம் சர்வதேச சந்தையில் போட்டியிடும் நிலைக்கு முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், நோர்வே மற்றும் ஜப்பான் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளுடன் சீநோர் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மொரிஷியஸில் சீநோர் படகு கட்டும் தளம் அமைக்கும் சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன.

வட மாகாண சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 150 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய சுற்றுலாப் படகு தயாரிக்கும் பொறுப்பும் சீநோர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!