பிம்சவிய திட்டம் குறித்து கிளிநொச்சி காணி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு கலந்துரையாடல்

#SriLanka #Kilinochchi #Project #Lanka4 #Awareness #discussion #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
பிம்சவிய திட்டம் குறித்து கிளிநொச்சி காணி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு கலந்துரையாடல்

இலங்கையில் பாரம்பரிய காணி உறுதி முறைக்கு மாற்றாக உறுதியான காணி உரிமைச் சான்றிதழை வழங்கும் தேசிய திட்டமான பிம்சவிய அது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட குடியேற்ற மற்றும் காணி உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் தலைமையில் காலை 9.30மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 

குறித்த கலந்துரையாடலில் உதவிப் பதிவாளர் நாயகம் J.K.S.K. கருணாரட்ண, காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் ஆணையாளர் (விசாரணை) சுனேத்திரா கோரள ஆராய்ச்சி, உதவி ஆணையாளர்கள் D. ஜெயரட்ண மற்றும் O.G.C.M. குணவர்த்தன, மேலதிக உரித்துப் பதிவாளர் R.M.R. தேனுஜா பியரத்தின, உரித்துப் பதிவாளர் C.D. ஹெட்டியாராய்ச்சி, மேலதிக மாவட்ட பதிவாளர் W.A.H.L. ரத்னசூரியா, பிரதிப் பதிவாளர் நாயகம் ஆனந்தி ஜெயரட்ணம் உள்ளிட்டோர்கலந்து கொண்டு உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்தனர்.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்கதிபர்கள், கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், மாவட்ட காணிப்பயன்பாட்டு உபயோக திட்டமிடல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4