10 வயது சிறுவனிடம் அதிக கட்டணம் வசூல்: பேருந்து நடத்துனருக்கு பணித்தடை
#SriLanka
#Bus
#Lanka4
#suspend
#Driver
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
வடமராட்சி கிழக்கு பகுதியில் 10 வயதுக்குட்பட்ட சிறுவனிடம் பெரியவர்களுக்கான முழு பேருந்து கட்டணத்தை வசூலித்த தனியார் பேருந்து நடத்துனருக்கு ஒரு வார கால பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடத்தனையிலிருந்து மருதங்கேணி நோக்கிப் பயணித்த சிறுவனிடம் கட்டண விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் அறவிடப்பட்டதாக அவரது தந்தை வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நடத்துனர் விதிமுறைகளை மீறி செயற்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விதிமீறல்களில் ஈடுபடும் பேருந்து ஊழியர்களுக்கு இது எச்சரிக்கையாக அமையும் என போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே