தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காக புதிய அரசியல் பேரவை

#SriLanka #people #LANKA4 #council #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காக புதிய அரசியல் பேரவை

இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 25 சதவீதமாக உள்ள தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கும் நோக்கில், தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்காகவே தமிழ் மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவை உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரிடம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரவையின் பிரதிநிதிகள் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது பேரவையின் நோக்கங்கள், ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவருடனான அண்மைய சந்திப்புகளின் விடயங்கள், நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கான முயற்சிகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

மாகாண சபை முறைமை உருவாக்கத்தில் இந்தியா வழங்கிய பங்களிப்பை சுட்டிக்காட்டிய பேரவை, இந்த விடயத்தில் இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!