அதிரடி சுற்றிவளைப்பில் சிக்கிய 31 வயது நபர் – ரூ.1.10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!
கம்பஹா – மினுவாங்கொட காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட அம்பகஹவத்த சந்தி பகுதியில், சுமார் ரூ.1.10 கோடி மதிப்பிலான 11 கிலோ 844 கிராம் கஞ்சா மற்றும் ரூ.5 இலட்சம் பணத்துடன் 31 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 10 இலட்சம் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என்றும், அவர் 'கெஹெல்பத்தர பத்மே' என்பவரின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய 'மல்க' என்ற நபரின் ஆதரவாளர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே