கடுவல பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து தீக்கிரை - விஷமிகள் அட்டகாசம்!
கடுவெல பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று, இன்று (05) அதிகாலை வேளையில் அடையாளம் தெரியாத இரு நபர்களால் தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளது.
இதில் குறித்த பேருந்து முற்றிலுமாக தீக்கிறையாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் அதிகாலை 2.30 மணிக்கும் 2.45 மணிக்கும் இடையில் ஒரு மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பேருந்திற்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிவைக்கப்பட்ட அந்தப் பேருந்து, அதிவேக நெடுஞ்சாலை வழியாக கடுவெல–மாத்தறை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்துள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் வாகனத்திற்குள் உறங்கிக் கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அருகிலிருந்த மற்றொரு பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் எச்சரித்ததை அடுத்து அவர்கள் காயமின்றி தப்பினர். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸார்தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை அடையாளம் காணவும், தாக்குதலுக்கான நோக்கத்தைக் கண்டறியவும் கடுவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே