காலாவதியான ஆயுர்வேத மருந்துகள், அழகுசாதனப் பொருட்களை பதுக்கிவைத்திருந்த கடை உரிமையாளருக்கு அபராதம்!

#SriLanka #CourtOrder #Fined #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
காலாவதியான ஆயுர்வேத மருந்துகள், அழகுசாதனப் பொருட்களை பதுக்கிவைத்திருந்த கடை உரிமையாளருக்கு அபராதம்!

காலாவதியான ஆயுர்வேத மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பிற நுகர்வோர் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததற்காக, கொழும்பு 13-ல் உள்ள ஒரு தனியார் நிறுவனமொன்றுக்கு சுமார் 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை உடனடியாக அழிக்கவும்  மாளிககந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த மேமாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்த விடயம் கண்டறியப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. 

இதற்கமைய காலாவதியான இறக்குமதி செய்யப்பட்ட ஆயுர்வேத மருந்துகளை மற்ற பொருட்களுடன் விற்பனைக்காக பதுக்கி வைத்தது, காலாவதியான பொருட்களை அப்புறப்படுத்துவது தொடர்பான பதிவேடுகளைப் பராமரிக்கத் தவறியது, மற்றும் அதிகபட்ச சில்லறை விலை அல்லது இறக்குமதியாளரின் விவரங்கள் குறிப்பிடப்படாத ஆயுர்வேத மருந்துகள், நறுமண சோப்புகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை வைத்திருந்தது ஆகிய நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் விதிகளை மீறியதற்காக, அந்நிறுவனத்தின் உரிமையாளர் மீது ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இதற்கிடையில்,  காலாவதியான மருந்துகள், தரம் குறைந்த அழகுசாதனப் பொருட்கள் அல்லது கட்டாயப் பொருள் தகவல் இல்லாத பொருட்களை விற்கும் வியாபாரிகள் குறித்து அலுவலக நேரத்தில் 1977 என்ற ஹாட்லைனைத் தொடர்புகொண்டு புகார் அளிக்குமாறு நுகர்வோர் விவகார ஆணையம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!