கஜினி திரைப்பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்
74 வயதான மூத்த நடிகர் பிரதீப் ராவத், ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக மும்பையில் காலமானார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயிலிருந்து மீண்ட அவருக்கு, கடந்த ஒன்றரை மாதங்களாக நோய் மீண்டும் தீவிரமடைந்தது.
மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து காலமானார்.
பி.ஆர்.சோப்ராவின் புகழ்பெற்ற 'மகாபாரதம்' தொடரில் அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.
பிரதீப் ராவத். தமிழில் சூர்யாவின் கஜினியில் இரட்டை வேடத்தில் வில்லனாக பிரதீப் ராவத் நடித்துள்ளார்.
இந்தி, தெலுங்கு, தமிழ் தவிர கன்னடம், மலையாளம், போஜ்புரி மற்றும் நேபாளி மொழிப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
பிரதீப் ராவத்தின் மறைவுக்கு இந்தியா முழுவதும் உள்ள பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே