மன்னாரில் போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது

#SriLanka #Mannar #Arrest #drugs #Lanka4 #L4
Prasu
2 hours ago
மன்னாரில் போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது
மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் நிலை குற்றத்தடுப்பு பிரிவினர் தாழ்வுபாடு கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த பல லட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் போது 9 கிலோ 400 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளனர். 

இந்நிலையில், கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் மற்றும் சந்தேக நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4