மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் நடந்த தாக்குதலில் சுவிஸ் நாட்டவர் ஒருவர் மரணம்
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் தலைநகரான பாங்குய்க்கு வடக்கே நடந்த தாக்குதலில், ஒரு சுவிஸ் நாட்டவரும் ஒரு மத்திய ஆப்பிரிக்க ராணுவ வீரரும் கொல்லப்பட்டனர்.
ராணுவ வட்டாரங்களின்படி, தாக்குதல் நடத்தியவர்கள் "இதுவரை அடையாளம் காணப்படாத ஆயுதமேந்திய கொள்ளையர்கள்" என்று தெரிவித்துள்ளனர்.
குறித்த சுவிஸ் நாட்டவர், கனிமப் படிவங்களைத் தேடுவதற்காக அப்பகுதிக்குச் சென்றிருந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது பாதுகாப்பு அதிகாரியான, ராணுவத்தில் ஒரு கீழ்நிலை அதிகாரியுடன் பயணம் செய்ததாகவும், அவரும் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பாங்குய்க்கு வடக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டமாரா நகருக்கு அருகே கடந்த வியாழக்கிழமை இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
உடல்கள் தலைநகருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மத்திய ஆப்பிரிக்க நீதித்துறை அதிகாரிகள், சூழ்நிலைகளைத் தெளிவுபடுத்தவும் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடரவும் ஒரு விசாரணையைத் தொடங்குவார்கள்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே