நுவரெலியா நோர்டன் பகுதியில் கனமழை: 258.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!

#SriLanka #NuwaraEliya #Rain #LANKA4 #Record #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 month ago
நுவரெலியா நோர்டன் பகுதியில் கனமழை: 258.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!

இன்று (04) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி நுவரெலியா – நோர்டன் பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நோர்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மேலும், கென்யொன் பகுதியில் 234.6 மில்லிமீற்றரும், லக்ஷபான பகுதியில் 208.4 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!