காலி முதல் பொத்துவில் வரையான கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும் - சிவப்பு எச்சரிக்கை அமுலில்
காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவக்கூடும் என வானிலை ஆய்வுத் துறை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையின்படி, இக்கடல் பகுதிகளில் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும், மணிக்கு 60-70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மறு அறிவிப்பு வரும் வரை, கடற்படை மற்றும் மீன்பிடித் தொழிலாளர்கள் இக்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், புத்தளம் முதல் கொழும்பு வழியாக காலி வரையிலான கடல் பகுதிகளில் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும் என்றும், மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இப்பகுதிகளில் செயல்படும் கடற்படை மற்றும் மீன்பிடித் தொழிலாளர்கள் விழிப்புடன் இருக்குமாறும், எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவுரைகளை உன்னிப்பாகக் கவனிக்குமாறும் வானிலை ஆய்வுத் துறை வலியுறுத்தியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே