களனி கங்கை தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் தொடர்கிறது – 48 மணி நேர எச்சரிக்கை நீடிப்பு!

#SriLanka #LANKA4 #Warning #Flood #Extend #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 month ago
களனி கங்கை தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் தொடர்கிறது – 48 மணி நேர எச்சரிக்கை நீடிப்பு!

களனி கங்கை தாழ்நிலப் பகுதிகளுக்காக ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருந்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளை, குறிப்பாக குறுக்கு வீதிகள் மற்றும் வெள்ளம் சூழக்கூடிய சாலைகள் வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் அவசர நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!