ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி மகிந்த ராஜபக்சவே!?

#SriLanka #Mahinda Rajapaksa #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி மகிந்த ராஜபக்சவே!?


மகர சிறைச்சாலை சுவரில் எழுதப்பட்டுள்ளதாக வெளியான புகைப்படம்!

இலங்கையின் மகர சிறைச்சாலையின் உட்புறச் சுவரில் கைதிகள் சிலரால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வாசகம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தச் சுவரெழுத்தில், 2019ஆம் ஆண்டு இலங்கையை உலுக்கிய "ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் முக்கிய சூத்திரதாரி மகிந்த ராஜபக்ச" என்று சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது. 

சமீபத்தில் இலங்கையின் பல சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இடையே கடுமையான மோதல்களும் அசாதாரண சூழ்நிலைகளும் ஏற்பட்டு வருகின்றன. 

குறிப்பாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் பலர் தற்காலிகமாக மகர சிறைச்சாலை வளாகத்திற்கு மாற்றப்பட்டனர். 

இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில், சிறைக்குள் இருக்கும் கைதிகள் நாட்டின் அரசியல் நிலவரங்கள் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைத் திருப்பங்கள் குறித்து தங்களின் கருத்துக்களை இவ்வாறு சுவரில் எழுதியுள்ளனர்.

நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு உள்ள தொடர்புகள் குறித்து அடுத்தடுத்து பல சாட்சியங்கள் வெளியாகி வருகின்றன. 

குறிப்பாக, ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 'பிள்ளையான்' என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்‌ஷ ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசியதாக நீதிமன்றத்தில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது. 

இத்தகைய அரசியல் திருப்பங்களின் பின்னணியிலேயே கைதிகளின் இந்த சுவரெழுத்து விவகாரம் ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

இது உண்மையிலேயே கைதிகளால்தான் எழுதப்பட்டதா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பதோடு இந்த எழுத்துக்கள் தொடர்பாக இதுவரை நாட்டின் தேசிய செய்திகள் எதுவும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!