நாட்டின் பல பகுதிகளில் மேகமூட்டமான வானிலை: 100மி.மீக்கும் அதிக மழைக்கு வாய்ப்பு!
நாட்டின் பல மாகாணங்களில் இன்று (03) மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி சபரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
இதேவேளை மத்திய, சபரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல முறை மழை பெய்யக்கூடும்.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு சில பகுதிகளில் மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமத்திய, சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே