யாழ் குருநகரில் பட்டாசு விபத்து: 32 வயது நபர் பரிதாப உயிரிழப்பு!

#SriLanka #Jaffna #Death #Accident #Human #fire #ImportantNews #L4
Lakhi
1 month ago
யாழ் குருநகரில் பட்டாசு  விபத்து: 32 வயது நபர் பரிதாப உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02.08.2026) அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்ற பட்டாசு வெடிப்பு சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிடைத்துள்ள தகவல்களின்படி, நேற்று மடு மாதா ஆலய யாத்திரைக்காக பக்தர்கள் புறப்பட்ட வேளையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், வெடிக்காமல் இருந்த அந்த பட்டாசை மீண்டும் வெடிக்கச் செய்வதற்காக குறித்த நபர் அதற்கு அருகில் சென்று ஊதியபோது, அது திடீரென வெடித்துள்ளது. இந்த வெடிப்பில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண காவல் நிலையத்தில் திடீர் மரண விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புக்கான காரணம் குறித்து யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பொதுமக்கள், வெடிக்காமல் இருக்கும் பட்டாசுகளை மீண்டும் கொளுத்தவோ அல்லது கையாளவோ முயற்சிக்காமல், அவற்றிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகி இருந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பாதுகாப்புத் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!