ஆகஸ்ட் மாத ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #people #Lanka4 #L4 #Monthly-Rasipalan
Prasu
2 hours ago
ஆகஸ்ட் மாத ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

எந்தச் சவாலையும் நேருக்கு நேர் சந்தித்து வெற்றி காணும் மன உறுதி கொண்டவர்களாக இருப்பீர்கள். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் உங்கள் மிகப்பெரிய பலம். 

இந்த மாதம் பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற்று முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். 

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். 

சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகள் விரைவாக நிறைவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். 

இணைய வழி விற்பனை மற்றும் புதிய கிளைகள் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். 

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவரின் ஆதரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி மற்றும் வேலை தொடர்பாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். 

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களின் வருகையால் இல்லம் உற்சாகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும். வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் சிலருக்கு அமையும். 

படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம் 

  • செவ்வாய்க்கிழமை கால பைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றியையும் மனநிம்மதியையும் அளிக்கும். 

ரிஷபம் 

பொறுமையும் நிதானமும் உங்கள் வாழ்க்கையின் அடித்தளம். எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் நிலைத்தன்மையை விரும்புபவர்கள் நீங்கள். 

பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புதிய பொறுப்புகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். 

வேலை மாற்றம் எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். வியாபார வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 

பழைய பாக்கிகள் வசூலாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு வருமானம் உயரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியை அளிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். புதிய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். மூத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். 

வருமானம் உயரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். உயர்கல்வி முயற்சிகளில் வெற்றி உண்டு.

பரிகாரம் 

  • வெள்ளிக்கிழமை மாரியம்மனை தரிசித்து எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது குடும்ப நிம்மதியை அதிகரிக்கும். 

மிதுனம் 

புத்திக்கூர்மையும் பேச்சுத் திறமையும் உங்கள் பலம். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். புதிய திட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். 

பதவி உயர்வு தொடர்பான நல்ல செய்திகள் வரும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். தொழில் விரிவடையும். 

வெளிநாட்டு தொடர்புகள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களுடன் நல்லுறவு உருவாகும். 

வீட்டில் சுபநிகழ்ச்சி நடைபெறும் வாய்ப்பு உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். படிப்பில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்

  • வியாழக்கிழமை முருகப்பெருமானுக்கு சிவப்பு மலர் மாலை சாத்தி வழிபடுவது தடைகளை நீக்கி வெற்றியை அளிக்கும்.

கடகம்

அன்பும் பொறுப்புணர்வும் நிறைந்த உங்களின் குணம் குடும்பத்தில் அனைவரின் அன்பையும் பெற்றுத் தரும். பணியிடத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். 

புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். விற்பனை அதிகரிக்கும். புதிய முதலீடுகள் லாபம் தரும். தொழில் விரிவாக்க முயற்சிகள் வெற்றி பெறும். 

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். சேமிப்பு அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் பயனளிக்கும். 

பரிகாரம் 

  • செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு சிவப்பு மலர் சாத்தி நெய்தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றியை அதிகரிக்கும். 

சிம்மம் 

தலைமைப் பண்பும் தன்னம்பிக்கையும் உங்கள் வாழ்க்கையை உயர்த்தும் முக்கிய அம்சங்களாக இருக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்பு உருவாகும். 

மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய பொறுப்புகள் உங்களை உயர்த்தும். புதிய கிளைகள் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். 

வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும். பிள்ளைகளின் சாதனைகள் மனநிறைவை அளிக்கும். 

புகழும் வருமானமும் உயரும். புதிய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். உயர்கல்வி முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விளையாட்டுத் துறையிலும் சாதிப்பீர்கள். 

பரிகாரம்

  • ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை வழிபட்டு செந்தாமரை மலர் சமர்ப்பிப்பது புகழை அதிகரிக்கும். 

கன்னி

ஒழுக்கமும் பொறுப்புணர்வும் உங்கள் வெற்றிக்கு அடிப்படையாக அமையும். திட்டமிட்ட செயல்பாடுகள் சிறந்த பலனைத் தரும். பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.

பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். 

வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவரின் ஆதரவு கிடைக்கும். 

சேமிப்பு உயரும். புதுமண தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும். வருமானமும் உயரும். 

வெளிநாடுகளுக்கு இந்த மாதம் செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு. போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். மாணவர்கள் நான்கு படிப்பர். 

பரிகாரம் 

  • புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவது அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைத் தரும்.

துலாம் 

சமநிலையுடன் சிந்தித்து செயல்படும் குணம் கொண்ட நீங்கள், அனைவரின் அன்பையும் எளிதில் பெறுவீர்கள். இந்த மாதம் முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புகள் அமையும். 

பணியிடத்தில் உங்கள் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும் நம்பிக்கையும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கலாம். 

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டு அவற்றை சிறப்பாக நிறைவேற்றி பாராட்டைப் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனநிறைவைத் தரும்.

வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 

பழைய பாக்கிகள் வசூலாகி பணப்புழக்கம் சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவரின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். 

பிள்ளைகளின் கல்வி மற்றும் வேலை தொடர்பான நல்ல செய்திகள் மனமகிழ்ச்சியைத் தரும். வீட்டிற்கு தேவையான வசதிகளை செய்து கொள்வீர்கள். 

புதிய படங்கள், தொடர்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் வாய்ப்புகள் கிடைக்கும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவும் வருமானமும் உயரும். 

படிப்பில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். உயர்கல்வி தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். 

பரிகாரம் 

  • வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு வெள்ளை மலர் சமர்ப்பித்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவது செல்வ வளத்தையும் குடும்ப மகிழ்ச்சியையும் அதிகரிக்கும். 

விருச்சிகம் 

மன உறுதியும் விடாமுயற்சியும் உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பலமாகும். இந்த மாதம் எடுத்த முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். 

பணியிடத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவேறும். 

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். 

வெளிமாநில மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் தொழில் வளர்ச்சி அடையும். புதிய முதலீடுகள் லாபகரமாக அமையும். கூட்டுத் தொழிலில் ஒற்றுமை அதிகரிக்கும். 

குடும்பத்தில் மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமையைத் தரும். சேமிப்பு உயரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். 

புதிய வாய்ப்புகள் தொடர்ந்து வரும். முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமையும். ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும். 

கல்வியில் முழு கவனம் செலுத்துவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் பயனளிக்கும். 

பரிகாரம் 

  • பௌர்ணமி அன்று தட்சிணாமூர்த்தியை வழிபட்டு மஞ்சள் மலர் சமர்ப்பிப்பது கல்வி மற்றும் தொழிலில் முன்னேற்றத்தை அளிக்கும். 

தனுசு 

எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு உதவிக்கரம் நீட்டும் நல்ல மனம் கொண்டவர் நீங்கள். நேர்மையும் நியாயமும் உங்கள் வாழ்வின் அடிப்படை.

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, கடினமான சூழ்நிலைகளையும் எளிதாக வென்று முன்னேறுபவர். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும். 

மேலதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான வாய்ப்பு உருவாகும். 

அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டாலும் அவற்றை திறமையாக செய்து முடிப்பீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 

அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவது எதிர்காலத்திற்கு நன்மை தரும். வியாபாரத்தில் வருமானம் தொடர்ந்து உயரும்.

புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய கிளை தொடங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். சுயதொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து வருமானம் அதிகரிக்கும். 

வெளிநாட்டு வணிக தொடர்புகள் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மனநிறைவை அளிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். 

கணவரின் முழு ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி மற்றும் வேலை தொடர்பான நல்ல செய்திகள் மகிழ்ச்சியைத் தரும். வீட்டிற்கு தேவையான வசதிகள் அதிகரிக்கும். 

உறவினர்களின் வருகையால் இல்லம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பச் செலவுகளை சிறப்பாக நிர்வகித்து சேமிப்பையும் உயர்த்துவீர்கள். புதிய படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

பரிகாரம் 

  • வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்கு மஞ்சள் மலர் சாத்தி, கடலைப்பருப்பு தானம் செய்வது கல்வி, தொழில் மற்றும் செல்வ வளத்தை அதிகரிக்கும். 

மகரம் 

எந்தச் செயலையும் திட்டமிட்டு செய்து வெற்றிகாணும் ஆற்றல் கொண்டவர் நீங்கள். தோல்வியைக் கண்டு துவண்டு போகாமல், அதை வெற்றிக்கான படிக்கல்லாக மாற்றும் மனப்பக்குவம் உங்களிடம் உண்டு.

உத்யோகத்தில் உங்களின் திறமையை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பொறுப்புகள் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். 

புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். பணியிடத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகும். 

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கும். 

தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் நிறைவேறும். கூட்டுத் தொழிலில் ஒற்றுமை அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் நீங்கி பணப்புழக்கம் உயரும். 

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். கணவர் தங்களின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்வார். பிள்ளைகளின் கல்வி மற்றும் வேலை தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். 

உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு உருவாகும். 

கலைத்துறையில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திறமைக்கு உரிய அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். பெரிய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். 

வருமானம் அதிகரிக்கும். ரசிகர்களின் ஆதரவு மேலும் உயரும். வெளிநாட்டு பயண வாய்ப்பும் ஒரு சிலருக்கு அமையும். படிப்பில் முழு கவனம் செலுத்துவீர்கள்.

ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பெற்றோரின் ஊக்கத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல்நலம் சீராக இருக்கும். 

பரிகாரம் 

  • வியாழக்கிழமை அன்று முருகப்பெருமானுக்கு சிவப்பு மலர் மாலை சாத்தி வழிபடுவது தடைகளை நீக்கி வெற்றியை அளிக்கும். 

கும்பம் 

மனிதநேயமும் உயர்ந்த சிந்தனையும் கொண்டவர் நீங்கள். வெளிப்புற தோற்றத்தை விட உள்ளத்தின் நல்ல பண்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். 

உத்யோகத்தில் மேலதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படும். 

அதை சிறப்பாக செய்து அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். சம்பள உயர்வு அல்லது ஊக்கத்தொகை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான தகவல் வரும். 

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் தொழில் வளர்ச்சி அடையும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். 

இணைய வழி விற்பனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தும் திட்டங்கள் வெற்றி பெறும். பணவரவு தொடர்ந்து அதிகரிக்கும். 

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். கணவரின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். பிள்ளைகளின் சாதனைகள் பெருமையைத் தரும். 

உறவினர்களின் வருகையால் இல்லம் கலகலப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்திருந்த பொருட்களை வாங்குவீர்கள். சேமிப்பு உயரத் தொடங்கும். 

புதிய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும். திறமைக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கும்.

பரிகாரம்

  • சனிக்கிழமை அன்று சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது தொழில், செல்வம் மற்றும் குடும்ப நிம்மதியை அதிகரிக்கும். 

மீனம் 

கருணையும் பொறுமையும் நிறைந்த உள்ளம் கொண்டவர் நீங்கள். பிறரின் துன்பத்தை தங்களுடையதாக எண்ணி உதவும் மனப்பான்மை உங்களுக்கு இயல்பாகவே உண்டு.

உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படும்.

பணிச்சுமை இருந்தாலும் அதை திறமையாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனநிறைவைத் தரும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உருவாகும். 

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய கிளைகள் தொடங்கும் வாய்ப்பு உருவாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு பெரிய நிறுவனங்களிடமிருந்து ஆர்டர்கள் கிடைக்கும். 

கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சேமிப்பு அதிகரிக்கும். தொழிலில் புதிய வளர்ச்சி பாதை உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும்.

கணவர் தங்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவார். பிள்ளைகளின் கல்வி மற்றும் வேலை தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். 

உறவினர்களின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வீட்டிற்கு புதிய வசதிகள் சேர்க்கப்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெறும். 

கலைத்துறையில் புதிய வாய்ப்புகள் தொடர்ந்து வந்து சேரும். எதிர்பார்த்த கதாபாத்திரம் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும். வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு அமையும். 

வருமானம் உயர்ந்து புகழ் மேலும் பரவும். கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவீர்கள். பெற்றோரின் ஊக்கத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். 

பரிகாரம்

  • சனிக்கிழமை அன்று ஐயப்ப சுவாமியை வழிபட்டு, நெய்தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்வது அனைத்து காரியங்களிலும் வெற்றியையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அளிக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4