தென்மேற்கு ஐரோப்பாவில் மேலும் 4,000 பேரை வெளியேற்ற பிரான்ஸ் உத்தரவு
போர்டோவிற்கு மேற்கே பரவிய ஒரு பெரிய காட்டுத்தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் வைத்திருக்க முயன்ற நிலையில், மீண்டும் வெப்பம் அதிகரித்ததால், பிரான்சின் அட்லாண்டிக் கடற்கரையோர சுற்றுலாத் தலங்களிலிருந்து மேலும் 4,000 பேரை வெளியேற்ற பிரெஞ்சு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இது பிரான்சின் அமைதிக்காலத்திலேயே நிகழக்கூடிய மிகப்பெரிய வெளியேற்ற நடவடிக்கையாக அமைந்துள்ளது.
லெஜ்-கேப்-ஃபெரெட் தீபகற்பத்தில் உள்ள பிரபலமான அட்லாண்டிக் கடற்கரையான கிராண்ட் குரோஹோட் அருகே புதிய தீப்பிழம்புகள் வெடித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போர்டோவின் சுற்றுச் சாலைக்கு வெளியே உள்ள லெ ஹெய்லான் மற்றும் மெரிஞாக், ஈசின்ஸ் பகுதிகளிலிருந்தே முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்ட சுமார் 60,000 குடியிருப்பாளர்கள் திரும்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மூன்று பகுதிகளிலும் தீ விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் குடியிருப்பாளர்கள் தங்கள் கைபேசிகளை இயக்கி வைக்கவும், அவசர காலப் பைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் முழுவதும், பெரும் காட்டுத்தீ காரணமாக சுமார் 330,000 மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் விடுமுறைத் தலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே