தமிழக முதல்வரின் கருப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள 5 அமைச்சர்கள்

#Tamil Nadu #government #Minister #Lanka4 #Vijay #ChiefMinister #Blacklist #L4
Prasu
6 hours ago
தமிழக முதல்வரின் கருப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள 5 அமைச்சர்கள்

முதல்வராக விஜய் பதவி ஏற்று 72 நாட்களை கடந்த நிலையில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் மிக முக்கியமானவை தூய ஆட்சியை நடத்துவோம் என்பது, மேலும் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின்பு பெரும்பாலான மக்கள் எங்களுக்கு முதல்வர் விஜய் எதுவும் செய்யவில்லை என்றாலும் கூட அவர், தூய ஆட்சியை, லட்சம் ஊழல் இல்லாத ஆட்சியை நடந்த வேண்டும் என்றே மக்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

ஆனால் முதல்வராக அரியணை எரிய விஜய் கூட அடக்கமாக இருக்க, இரு சில அமைச்சர்கள் செய்யும் நடவடிக்கைகள் தாங்க முடியலடா சாமி என்று வாக்களித்த மக்களே எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைத்துள்ளது.

குறிப்பாக தமிழகம் முழுவதும் தவெக வேட்பாளர் யார் என்றே தெரியாமல், விஜய் என்கிற முகத்திற்காகவே மக்கள் வாக்களித்த நிலையில், இந்த உண்மையை உணராத சில அமைச்சர்கள், என்னமோ இவர்கள் முகத்திற்கு தான் மக்கள் வாக்களித்தது போன்றும், அமைச்சராவதற்கு முன்பு அவர்களின் உடல் அமைப்புகள், நடை பேச்சு ஒரு மாதிரியாகவும், அமைச்சரான பின்பு அவர்களின் நடை பேச்சு வேற மாதிரியாக இருப்பது, அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்கிற பழமொழி தான் நியாபத்துக்கு வருகிறது என்கிறார்கள் தமிழக மக்கள்.

அதே நேரத்தில் ஒரு பக்கம் முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் மேலும் அவருடைய செல்வாக்கை உயர்த்தும் வகையில் இருந்து வரும் நிலையில், சில அமைச்சர்கள் செய்யும் அட்ராசிட்டி ஒட்டு மொத்த தவெக ஆட்சியையும் டேமேஜ் செய்வது போன்று அமைந்து வருவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் அடுத்து விரைவில் அமைச்சரவை மாற்றத்தை செயல்படுத்த தயாராகி விட்டார் முதல்வர் விஜய் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

 மொத்தம் 34 அமைச்சர்கள் உள்ள நிலையில், 30 அமைச்சர்கள் தவெகவை சேர்ந்தவர்கள், இதில் 10 அமைச்சர்கள் முதல்வரின் கருப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும், அந்த கருப்பு பட்டியலில் இடம் பெற்ற 10 அமைச்சர்களில் 5 அமைச்சர்கள் பதவியை அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது பறிப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்கிற அளவுக்கு 5 அமைச்சர்கள் பதவி பறிக்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

முதல் அமைச்சரின் கருப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள மீதம் உள்ள 5 அமைச்சர்களில் 3 அமைச்சர்களின் பதவியும் பறிப்பது குறித்து இன்னும் பரிசீலனையில் இருப்பதால், அந்த மூன்று அமைச்சர்களின் பதவிகளுக்கும் உத்தரவாதம் இல்லை என்கிற நிலையில் தான் உள்ளது.

மேலும் மற்ற இரண்டு அமைச்சர்கள் மிக முக்கியமான அமைச்சர்கள் என்றும் அவர்களிடம் இருக்கும் அதிகாரமிக்க துறையை பறித்துவிட்டு டம்மி பதவியை கொடுக்க முடிவு செய்துள்ளார் முதல்வர் விஜய் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தங்களை நேரில் பார்க்கும் போது முதல்வர் விஜய் சிரித்த முகத்துடன் பேசுகிறார், அதனால் நம்ம பதவிக்கு ஆபத்து இல்லை என்று நினைக்க கூடிய சில அமைச்சர்களின் பெயரும் கூட முதலவர் விஜயின் கருப்பு பட்டியலில் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தென் மாவட்டத்தை சேர்ந்த 2 அமைச்சர்களின் பதவி அடுத்து வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது பறிக்க பட வைய்ப்புள்ளது என்கிறது கோட்டை வட்டாரங்கள். அந்த வகையில் முதல்வர் விஜய் ஊழல், லஞ்சம் போன்ற விஷயத்தில் மட்டும் எந்த விதத்திலும் சமரசமே இல்லை.

அவர்களும் மன்னிப்பும் இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும், ஆட்டம் போடும் பல அமைச்சகர்களின் கொட்டம் விரைவில் அடங்க இருக்கிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4