தங்கதுரை – குட்டிமணி சிலை திறப்பு: ஏற்பாட்டாளர் கைது, பிணையில் விடுதலை
வல்வெட்டித்துறையில் தங்கதுரை மற்றும் குட்டிமணியின் உருவச்சிலை திறப்பு விழா ஏற்பாடுகள் தொடர்பில், வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் கந்தசாமி சதீஸ் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவிருந்த சிலை திறப்பு நிகழ்வு தொடர்பில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவர், பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட அவரை, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்ததுடன், வழக்கை நாளை வரை ஒத்திவைத்துள்ளது.
மேலும், குறித்த சிலை திறப்பு நிகழ்வை நடத்துவதற்கும் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.
1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தில் தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே