2026 பாடசாலை இரண்டாம் தவணை விடுமுறை அறிவிப்பு வெளியீடு – கல்வி அமைச்சு தகவல்

#SriLanka #School #LANKA4 #Ministry of Education #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #holiday
Abi
2 months ago
2026 பாடசாலை இரண்டாம் தவணை விடுமுறை அறிவிப்பு வெளியீடு – கல்வி அமைச்சு தகவல்

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை 2026 ஆகஸ்ட் 14 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நிறைவடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு 2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் செப்டம்பர் 6 ஆம் திகதி வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படும்.

விடுமுறைக்குப் பின்னர், மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் 2026 செப்டம்பர் 7 ஆம் திகதி (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கிடையில், முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை மற்றும் விடுமுறை அட்டவணையில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹஜ் பெருநாள் உள்ளிட்ட மதரீதியான விசேட தினங்களை கருத்தில் கொண்டு, முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக தனியான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்கள் கல்வி அமைச்சின் விசேட சுற்றுநிருபம் மூலம் வெளியிடப்படும் என்றும், அதன்படி முஸ்லிம் பாடசாலைகள் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனவே, பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகங்கள் கல்வி அமைச்சின் அடுத்தடுத்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளை அவதானித்து, அதற்கேற்ப கல்வி நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!