ஈரானுக்கு பயணம் செய்வதை ஒத்திவைக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தல்!
ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக அந்நாட்டிற்கு பயணம் செய்வதை ஒத்திவைக்குமாறு இந்திய மத்திய அரசு மக்களை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சமீப நாட்களாக ஈரானில் நிலையற்ற தன்மை மற்றும் மோதல்கள் அதிகரித்துள்ளன என்றும், இதனால் இந்திய குடிமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியது.
எந்தவொரு நோக்கத்திற்காகவும் ஈரானுக்கு செல்ல திட்டமிடும் இந்திய குடிமக்கள், பாதுகாப்பு சூழல் சீரடையும் வரை தங்கள் பயணத்தை தற்காலிகமாக தள்ளிவைக்க வேண்டும். அவர்கள் நிலவரத்தை முழுமையாக அறிந்துகொள்ள செய்திகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
மேலும் நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகள் போன்ற அதிக இராணுவ நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே