கிளிநொச்சிக்கு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதியமைச்சர் சதுரங்க அபயசிங்க களவிஜயம்!
#SriLanka
#Kilinochchi
#Visit
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதியமைச்சர் சதுரங்க அபயசிங்க இன்று கிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது தேசிய உப்பு உற்பத்தி நிறுவனத்தின் கீழுள்ள ஆணையிறவு உப்பு உற்பத்தி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் உப்பு உற்பத்தி செயற்பாடுகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் இரசாயன தொழிற்ச்சாலையின் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார்.
பிரதியமைச்சரோடு பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் தலைவர் சதானந்தன் நேசராஜன், தேசிய உப்பு உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் சிவசோதி சிவசங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.