நாட்டின் பல பகுதகளிலும் கொட்டித் தீர்க்கும் மழை!

#SriLanka #weather #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
நாட்டின் பல பகுதகளிலும் கொட்டித் தீர்க்கும் மழை!

மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (19) பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 பிற்பகல் 2.00 மணிக்கு மேல் அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 

 வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-5 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும்  வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது. 

 இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!