ரணில் சிறை கம்பிகளை எண்ணினார்: ராசபக்ச எண்ணப்போகிறாரா என்பது சட்டம் தான் முடிவு செய்யும் - ராமலிங்கம் சந்திரசேகர்

#SriLanka #Mahinda Rajapaksa #Prison #Ranil wickremesinghe #LANKA4 #Politician #L4 #RamalingamChandrasekhar
Prasu
2 months ago
ரணில் சிறை கம்பிகளை எண்ணினார்: ராசபக்ச எண்ணப்போகிறாரா என்பது சட்டம் தான் முடிவு செய்யும் - ராமலிங்கம் சந்திரசேகர்

ரணில் விக்ரமசிங்க சிறைக் கம்பி எண்ணினார், மகிந்த ராஜபக்சவும் கம்பி எண்ணவேண்டிய நிலை வரலாம். சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது நாம் ஒருபோதும் தராதரம் பார்ப்பதில்லை என்று அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

இது அநுரகுமாரவின் அரசாங்கம், இங்கு மோசடிகளுக்கு எவ்வித இடமும் இல்லை. எமது ஜனாதிபதி குப்பி லாம்பு வெளிச்சத்தில் படித்து, வறுமை மற்றும் கஷ்டங்களுக்கு மத்தியில் முன்னுக்கு வந்தவர்.அதனால்தான் ஏழை எளிய மக்களின் பக்கம் நின்று அவர் சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றார்.

அரச அதிகாரிகளைக் கூடச் சுதந்திரமாக வேலை செய்யவிடாமல் இங்குள்ள சிலர் வதந்திகளைப் பரப்பி வந்தனர் என்றும் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!