நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு காரணம் உடற்பயிற்சியா? குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தகவல்

#Death #Police #Prison #Negombo #LANKA4 #prisoner #L4 #clash
Prasu
2 months ago
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு காரணம் உடற்பயிற்சியா? குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தகவல்

கட்டுவெல்லேகம சுரேஸ் உடற்பயிற்சி செய்ய போதிய நேரம் இல்லை எனக் கூறி சிறைச்சாலை அதிகாரியை கொலை செய்ய மிரட்டியதால் மோதல் வெடித்ததாக CID நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல், தமக்கு உடற்பயிற்சி செய்வதற்கு போதிய நேரம் இல்லை எனக் கூறி கட்டுவெல்லேகம சுரேஷஸ் எனும் கைதி, சிறைச்சாலை அதிகாரி ஒருவரை கொலை செய்ய மிரட்டி குழப்பமாக நடந்துகொண்டதன் காரணமாகவே ஆரம்பமானதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீர்கொழும்பு நீதவான் சிலனி பெரேரா முன்னிலையில் நீதிமன்றில் விடயங்களை சமர்ப்பித்தது.

இந்த மோதல் கடந்த 05 மற்றும் 06 ஆகிய திகதிகளில் இடம்பெற்றதுடன், இதில் 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 09 விசேட அதிரடிப்படை அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றிற்கு அறிவித்தது.

இந்த சம்பவத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 89 பொலிஸ் அதிகாரிகள் கொழும்பிலிருந்து நீர்கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர் என்பதையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை எதிர்வரும் 16ம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!