செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்புக்கான உலக அமைப்பை நிறுவ 29 நாடுகள் இணைந்த ஒப்பந்தம் கையெழுத்து!

#SriLanka #China #Agreement #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்புக்கான உலக அமைப்பை நிறுவ 29 நாடுகள் இணைந்த ஒப்பந்தம் கையெழுத்து!

செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்புக்கான உலக அமைப்பை நிறுவுவதற்காக இருபத்தொன்பது நாடுகள் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 

இந்த ஒப்பந்தம்  நேற்று (16) ஷாங்காயில் கையெழுத்திடப்பட்டுள்ளது. 

இதன்படி  இந்த அமைப்பு ஷாங்காயைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு சுதந்திரமான, அரசுகளுக்கிடையேயான சர்வதேச அமைப்பாக இருக்கும். 

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் குழுவின் உறுப்பினராகவும் உள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, சீன அரசாங்கத்தின் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

 கஜகஸ்தான், லாவோஸ், பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 29 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். 

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். ஒப்பந்தத்தின்படி, இந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நோக்கங்களை நிலைநிறுத்தி, மக்கள் மைய அணுகுமுறையைக் கடைப்பிடித்து, பொது நன்மைக்காக பரந்த ஆலோசனைகளையும் கூட்டுப் பங்களிப்புகளையும் வழங்க உறுதிபூண்டுள்ளது. 

 செயற்கை நுண்ணறிவில் சர்வதேச ஒத்துழைப்பையும் உலகளாவிய நிர்வாகத்தையும் மேம்படுத்துவதும், பாதுகாப்பு மற்றும் நேர்மையை உறுதிசெய்துகொண்டு, அனைத்து மனிதகுலத்தின் நலனுக்காக செயற்கை நுண்ணறிவின் சீரான மற்றும் ஒழுங்கான வளர்ச்சியைத் திறம்பட முன்னெடுத்துச் செல்வதும் இதன் நோக்கமாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!