முன்னாள் காவல்துறைத் தலைவர் (ஐஜிபி) சி.டி. விக்ரமரத்ன தற்கொலை செய்துகொண்டதாக தகவல்!

#SriLanka #Police #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
முன்னாள் காவல்துறைத் தலைவர் (ஐஜிபி) சி.டி. விக்ரமரத்ன தற்கொலை செய்துகொண்டதாக தகவல்!

முன்னாள் காவல்துறைத் தலைவர் (ஐஜிபி) சி.டி. விக்ரமரத்ன தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 அத்துருகிரியாவில் உள்ள தனது இல்லத்தில் அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. 

குறித்த துப்பாக்கிச்சூட்டிற்கு பிறகு இன்று காலை (17) முல்லேரியாவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டப்போதும் அவர்,  உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 

 30 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறையில் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன, நாட்டின் 35வது காவல்துறைத் தலைவர் ஆவார். 

 காவல்துறைத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, விக்ரமரத்ன தெற்கு மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி காவல்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

 ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, அப்போதைய காவல்துறைத் தலைவர் புஜித் ஜெயசுந்தர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார், மேலும் விக்ரமரத்ன பதில் காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 

 அதனைத் தொடர்ந்து, 25 நவம்பர் 2020 அன்று அவர் அப்பதவியில் உறுதிப்படுத்தப்பட்டு, 25 நவம்பர் 2023 அன்று ஓய்வு பெறும் வரை காவல்துறைத் தலைவராகப் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!