பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் கொடிய தாக்குதல்கள் - மூவர் உயிரிழப்பு!

#SriLanka #Attack #Pakistan #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் கொடிய தாக்குதல்கள் - மூவர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், பயங்கரவாதிகள் தனித்தனியே மேற்கொண்ட தாக்குதல் சம்பவங்களில் , மூன்று காவலர்கள் கொல்லப்பட்டதுடன், 34 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் மற்றும் தானியங்கி ஆயுதங்களைக் கொண்டு காவல்துறை வாகன அணிவகுப்பு மீது நேற்று  தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர். 

அதேபோல் ஹைதரில் உள்ள லடம் டாப் அருகே வாகன அணிவகுப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் இரண்டு பொலிஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பன்னு மாவட்டத்தில் உள்ள மிரியான் காவல் நிலையத்தின் மீது தற்கொலைக்குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. 

பன்னு மாவட்ட காவல் அதிகாரி கேப்டன் (ஓய்வு) முஹம்மது ஃபர்கான் பிலால் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்திப்படுத்தியதுடன் மேலதிக விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என அறிவித்தார். 

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!