செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வு பணிகள் மீள ஆரம்பம் : இரு சிறுவர்களின் என்புகள் அடையாளம்!

#SriLanka #Jaffna #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Semmani human burial
Thamilini
2 months ago
செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வு பணிகள் மீள ஆரம்பம் : இரு சிறுவர்களின் என்புகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளன. 

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை  56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் 32 நாட்கள் அகழ்வு பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த  23ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.  

இந்நிலையில் மீளவும் நேற்று முதல் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியின்போது  2 சிறு குழந்தைகளின் என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் இதுவரையில் 87 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 414 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 409 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!