மலையகத்தில் பேரலையாகப் பெருகும் ஜனாதிபதி அநுரவிற்கான ஆதரவு
மாற்றுக் கொள்கைகள் மையம் (Centre for Policy Alternatives - CPA) வெளியிட்டுள்ள ஜூலை மாத ஆய்வு அறிக்கையின்படி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு 75.5 சதவீத மக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 29.4 சதவீத மக்கள் ஆதரவு பதிவாகியுள்ளதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன அடிப்படையிலான தரவுகளின்படி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அதிகபட்ச ஆதரவு மலையகத் தமிழ் மக்களிடையே 94.4 சதவீதமாகவும், முஸ்லிம் சமூகத்தினரிடையே 93.4 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், சிங்கள சமூகத்தினரிடையே ஜனாதிபதிக்கான ஆதரவு 69.9 சதவீதமாக இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
வயது அடிப்படையிலான பகுப்பாய்வில், 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 81.6 சதவீதம் பேர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு திருப்தி தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கான மக்கள் திருப்தி அனைத்து சமூகங்களிலும் ஒப்பீட்டளவில் குறைவாகவே பதிவாகியுள்ளதாக மாற்றுக் கொள்கைகள் மையத்தின் (CPA) ஜூலை மாத ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே