வாய் புற்றுநோயைத் தடுக்க அதிரடி நடவடிக்கை! புகையிலை வெற்றிலை விற்பனைக்கு இலங்கையில் தடை!

#SriLanka #LANKA4 #Ban #cancer #Tobacco #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
வாய் புற்றுநோயைத் தடுக்க அதிரடி நடவடிக்கை! புகையிலை வெற்றிலை விற்பனைக்கு இலங்கையில் தடை!

இலங்கையில் வாய் புற்றுநோய் பரவலைத் தடுக்கும் நோக்கில், புகையிலை மற்றும் பாக்கு கலந்த வெற்றிலைக் கூட்டுகளை (Betel Quid) விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை முற்றுகையிட்டு நாடளாவிய ரீதியில் அதிரடிச் சோதனைகளை முன்னெடுக்க பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் (PHIs) தீர்மானித்துள்ளது.

புகையிலை கலந்த வெற்றிலைச் சுருள்களைத் தயாரிப்பது, கடைகளில் காட்சிப்படுத்துவது மற்றும் விற்பனை செய்வது தற்போதைய சட்டங்களின்படி முற்றிலும் தடைசெய்யப்பட்ட குற்றமாகும். 

இதனை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக எந்தவித சலுகையுமின்றி நீதிமன்றத்தினூடாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இலங்கையில் ஆண்களிடையே அதிகம் பதிவாகும் புற்றுநோய் வகைகளில் வாய் புற்றுநோயே முதலிடத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

நாளாந்தம் பெருமளவிலானோர் இந்த நோயினால் உயிரிழக்கும் அவலம் தொடர்வதாலேயே, இந்தத் தடையை மிகத் தீவிரமாக அமல்படுத்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் களமிறங்கியுள்ளனர்.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் பாக்கு மற்றும் புகையிலை கலந்த போதை தரும் வெற்றிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ய விசேட அதிகாரிகள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 

பொதுமக்களும் தங்களது ஆரோக்கியத்தைக் கருத்திற்கொண்டு இவ்வாறான பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும் எனவும், தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் குறித்து அருகில் உள்ள PHI

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!