சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க இதுதான் வழி - அபாயகரமான ஔடதங்கள் சட்டத்தில் திருத்தம் தேவை!!

#SriLanka #Prison #Ali Sabri #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க இதுதான் வழி - அபாயகரமான ஔடதங்கள் சட்டத்தில் திருத்தம் தேவை!!

சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்கான ஒரு மாற்று நடவடிக்கையாக, நச்சுப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் சட்டத்தில் உடனடியாக திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என  முன்னாள் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைகளில் நிலவும் மோதல் மற்றும் நெரிசல் குறித்து கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம், 2022 இல் நச்சுப் பொருட்கள்,அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களும் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளுமே ஆகும். 

இரசாயன பகுப்பாய்வு அறிக்கை வரும் வரை போதைப்பொருளின் தூய எடையைக் கண்டறிய முடியாது. அதைக் கண்டறிய ஒரு வருடம் வரை ஆகிறது. சட்ட நடவடிக்கைகளுக்கு மேலும் 6 மாதங்கள் ஆகின்றன. அப்போது ஒரு வருடமும் 6 மாதங்களும் கடந்துவிடுகின்றன.

இதனால் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதில் காலதாமதம் ஏற்படுவதுடன். கைதிகள் அதுவரை விளக்கமறியலில் வைக்கப்படுகிறார்கள். 

ஆகவே இந்த திட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும்.  தூய எடைக்கு அல்லாமல், மொத்த எடைக்கு ஏற்ப நீதிமன்றத்தை நாட வழிவகை செய்யப்பட வேண்டும்” என்றார். 




உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!