2026ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை - பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

#SriLanka #Department #Examination #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
2026ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை -  பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

 தொடர்புடைய அறிவிப்பை நேற்றைய தினம் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

 அதற்கமைய, தகுதியான பரீட்சகர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரும் நடைமுறையானது நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி வரை இணையவழியில் (Online) மாத்திரமே மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்துக்கொள்ள  இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.donets.lk அல்லது onlineexams.gov.lk.eic ஆகிய இணையத்தள முகவரிகளுக்குச் சென்று பார்வையிடுங்கள். 

மேலும், இது தொடர்பில் ஏதேனும் மேலதிக விபரங்கள் அல்லது விசாரணைகள் தேவைப்படின், 0112784208 / 0112784537 அல்லது 0112785922 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!