டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி  மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள்  வழங்கி வைக்கப்பட்டன.

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி  மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள்  வழங்கி வைக்கப்பட்டன.

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் கடற்றொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.படகுகள் வலைகள் அழிவடைந்தன.

அரசாங்கம் அவற்றிற்கான இழப்பீடுகளை வழங்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ள நிலையில் இன்றைய தினம் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கும் நிகழ்வு கடற்றொழில் திணைக்கள மாவட்ட அலுவலகத்தில் கடற்றொழில் திணைக்கள மாவட்ட உதவிப்பணிப்பாளர் வி.கலிஸ்ரன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கலந்து கொண்டு மீனவர்களுக்கு வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் ம.மோகன், திணைக்கள உத்தியோகத்தர்கள் ,மீனவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது 73மீனவர்களுக்கு வலைகளும் 02மீனவர்களுக்கு படகும் வழங்கப்பட்டது. 

பாதிக்கப்பட்ட ஏனைய மீனவர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!