நீர்கொழும்பு சிறைக் கலவரம் - 200 பேர் மீது கொலைக்குற்ற வழக்கு பதிவு!

#SriLanka #Crime #Negombo #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
நீர்கொழும்பு சிறைக் கலவரம் - 200 பேர் மீது கொலைக்குற்ற வழக்கு பதிவு!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை சம்பவம் தொடர்பாக 200 கைதிகளுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த வன்முறை சம்பவம் தொடர்பாக 08 பொலிஸ் அதிகாரிகள் உள்பட 20 கைதிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

இதற்கமைய சிறைக் கலவரம் தொடர்பான சிசிடிவி காணொளி ஒன்று ஆய்வு உட்படுத்தப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்  தெரிவித்துள்ளது.

மேலும் கைதிகளிடம் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் சென்றடைந்த விதம், சிறைச்சாலை ஆயுதக் களஞ்சியத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

 சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்த அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!