நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதில் மாற்றம் செய்வது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அரசுக்கு கோரிக்கை

#SriLanka #retirement #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதில் மாற்றம் செய்வது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அரசுக்கு கோரிக்கை

நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதில் மாற்றம் செய்வது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் தற்போது பெறப்பட்டு வருவதாகவும், அரசாங்கம் இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து வருவதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நREளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

மிரிகம மருத்துவமனையில் புதிய சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை பிரிவின் திறப்பு விழாவில் கலந்தகொண்டப்பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், "பல்வேறு தொழில் வல்லுநர்களிடமிருந்து ஏற்கனவே கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. 

மேல்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றிலிருந்து மட்டுமல்லாமல், சுகாதார சேவையில் உள்ள சில தொழில் வல்லுநர்களிடமிருந்தும் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. சிறைத்துறையிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன. 

மற்ற தொழில் வல்லுநர்கள் தங்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்காக நீண்ட காலம் பணியாற்றலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. சிலர் இதை எதிர்க்கலாம். ஆனால், அரசாங்கம் என்ற முறையில், நாங்கள் அந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து வருகிறோம்." என்றார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!