டித்வா புயல் - 07 மாதங்களாக வீடுகளை இழந்து நிர்கதியாகியுள்ள மக்கள்!! அரசு பாராமுகம்!

#SriLanka #Strom #House #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
டித்வா புயல் - 07 மாதங்களாக வீடுகளை இழந்து நிர்கதியாகியுள்ள மக்கள்!! அரசு பாராமுகம்!

டித்வா புயலால் வீடுகளை இழந்த கண்டகெட்டிய, உல்பதகம மக்கள் கடந்த 07 மாதமாக தங்க இடம்மின்றி தவித்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட இந்த புயல் அரசாங்கத்திற்கு பாரிய நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 

இருப்பினும் நாட்டை மீளவும் கட்டியெழுப்ப பெருமளவிலான நிறுவனங்கள் நிவாரணத் தொகையை வழங்கியிருந்தன. 

இருப்பினும் சில பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்க இடமின்றி தவித்து வருகின்றனர். இதன்படி உல்பதகம கிராமத்தில், புயலால் 27 குடும்பங்கள் தங்கள் வீடுகளை முழுமையாக இழந்தன, மேலும் பல வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன.

பேரழிவு ஏற்பட்டு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கடந்த போதிலும், வீடுகளை கட்டுவதற்கு தேவையான நிதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!