நீர்கொழும்பு சிறைக் கலவரம் : அசமந்தமாக செயற்பட்ட நீதியமைச்சர் உடன் பதவி விலக வேண்டும்!!

#SriLanka #Prison #Negombo #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
நீர்கொழும்பு சிறைக் கலவரம் : அசமந்தமாக செயற்பட்ட நீதியமைச்சர் உடன் பதவி விலக வேண்டும்!!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் முதல்நாளிலேயே நடவடிக்கை எடுத்திருந்தால்,  பெருமளவிலான மரணங்களை தடுத்திருக்கலாம் எனவும், இந்த பொறுப்பை  நிறைவேற்ற தவறிய நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தில் நேற்று  (12)  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தினால் இதுவரை சிறைச்சாலை அதிகாரிகள் 8பேரும் 21 கைதிகளும் மரணித்துள்ளனர். 

சிறைச்சாலையில் மோதல் சம்பவம் இடம்பெற்ற முதல்நாளில் இரண்டு கைதிகள் மாத்திரமே உயிரிழந்திருந்தனர்.அன்றைய தினமே சம்பவத்துக்கு காரணமானவர்களை அங்கிருந்து அகற்றியிருந்தால், இந்த பிரச்சினை இந்தளவு தூரம் சென்றிருக்காது.  சிறைச்சாலை அதிகாரிகள் யாரும் மரணித்திருக்கவும் மாட்டார்கள்.  

ஆனால் சிறைச்சாலையில் முதல்நாள் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான நீதி அமைச்சர் எந்த தகவலும் அறியாமல் இருந்துள்ளார். 

அவர் சமூகவலைத்தளங்களை பார்த்துத்தான் இந்த விடயங்களை அறிந்துகொள்வதுபோன்றே ஊடகங்களுக்கு பதிலளித்திருந்தார். பொறுப்புவாய்ந்த ஒரு அமைச்சரிடமிருந்து இவ்வாறான பொறுப்பற்ற பதிலை யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. 

நீதி அமைச்சர் பொறுப்புடன் செயற்பட்டிருந்தால், இந்த சம்பவத்தை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம். அதனால் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்ற தவறிய நீதி அமைச்சர், பதவி விலகி முன்மாதிரியாக செயற்பட வேண்டும் என்பதுடன் பொறுப்பை நிறைவேற்ற தவறியமைக்காக நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்றார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!